நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!
டெல்லி உயரநீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி.
01:32 PM May 21, 2025 IST | Web Editor
Advertisement
பண விவகாரத்தில் சிக்கிய டெல்லி நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது FIR பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் மேத்யூ நெடும்பாரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபய்.எஸ்.ஓஹா உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, ஏற்கனவே தலைமை நீதிபதி உத்தரவுபடி நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த அறிக்கை தற்போது குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.
எனவே நீதிபதி யஸ்வந்த் வர்மா மீது கூடுதல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசை மனுதாரர் அணுகலாம் என ஆலோசனை வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .