அமலாக்கத்துறையை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ!
அமலாக்கத்துறையை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ-யும் கைது செய்தது.
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான காலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயரதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் – விபத்து வழக்காக மாற்றம்!
தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி விட்டதால், எங்களது மனு தானாகவே காலாவதி ஆகி விட்டது. எனவே அதனை திரும்பப்பெற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் பி.வி.ராஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கெஜ்ரிவால் தரப்பு திரும்பப்பெற அனுமதி வழங்கப்படுகிறது. இறுதி தீர்ப்புக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டு, முன்னதாக தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதையடுத்து, நீதிமன்றத்தில் வைத்தே காலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இத்தனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீனை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.