ஊழல் வழக்கில் #Peru-வின் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
ஊழல் குற்றச்சாட்டடில் பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனமான ஓடெப்ரெக்ட்டிடம் லஞ்சம் வாங்கியதாக, பெருவின் முன்னாள் அதிபர் அலெஜான்ட்ரோ டோலிடோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெருவின் தெற்கு கடற்கரையை மேற்கு பிரேசிலில் உள்ள அமேசானிய பகுதியுடன் இணைக்கும் சாலையை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பெற அனுமதித்ததற்காக, Odebrecht என்று அழைக்கப்பனும் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து 35 மில்லியன் டாலர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும் லஞ்சம் கொடுத்து தான் ஒப்பந்தங்களை பெற்றதாக அந்த கட்டுமான நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இதனையடுத்து டோலிடோவுக்கு 20 ஆண்டுகள் மற்றும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையின் விசாரணையில், டோலிடோ உட்பட பெருவின் முன்னாள் அதிபர்கள் 4 பேர் மீது லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது. ஆனால் தற்போது வரை டோலிடோ தனது மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். கொடஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற 78 வயதான டோலிடோ, 2001 முதல் 2006வரை பெருவின் அதிபராக பதவி வகித்தார்.