ஜோ பைடன் மீது பதவி நீக்க விசாரணைக்கு அனுமதி - அமெ. நாடாளுமன்ற கீழவை ஒப்புதல்!
ஜோ பைடனுக்கு எதிரான பதவி நீக்க விசாரணையை மேற்கொள்ள நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அதிபராக உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது சுமார் ரூ.11 கோடி தொகை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
ஜோ பைடன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அது குறித்து அமெரிக்க அதிபரிடம் விசாரணையை தொடங்க பாராளுமன்ற கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் பைடன் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடும்பத்தினரின் தொழில் முறைகேடுகள் தொடர்பாக, அவருக்கு எதிரான பதவி நீக்க விசாரணையை மேற்கொள்ள நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கீழவையில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் பைடனின் பதவியோ, வரும் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதோ பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.