சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை - துணைவேந்தர் அதிரடி!
பாலிவுட் நடிகர் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அனுமதி மறுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (குசாட்) ஒரு இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து இது போன்ற நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜூலை 5ம் தேதி பாலிவுட் நடிகர் சன்னி லியோனின் நடன நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிலையில், அரசு விதித்த உத்தரவின் அடிப்படையில், தற்போது இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி பல்கலைக்கழகம் லியோனின் நிகழ்ச்சியை நிகழ்ச்சி பட்டியலில் சேர்க்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு, கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மாள், பதிவாளருக்கு உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தி, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சன்னி லியோன்.
சன்னி லியோன் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டு அதன் பின்னர் இந்தி படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் முதன்மையான கதாபாத்திரதத்தில் நடித்திருந்தார்.