Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சியில் ரூ.3 கோடியில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் : ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு!

10:05 AM Jan 23, 2025 IST | Web Editor
Advertisement

ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் தினத்தன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இது மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாடுகள் பங்கேற்கும்.

Advertisement

இந்த ஆண்டு சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை அமைச்சர் அன்பில் மகேஸ் விழா குழுவினரிடம் வழங்கினார். திருச்சி பெரிய சூரியூரில் ரூ.3 கோடி செலவில் இந்த ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக இது அமையும்.

இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான பணிகள் தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு ஸ்டேடியும் அமைப்பதற்கான மின்- டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

அதில், “திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் கிராமத்தில் முதலமைச்சர் மினி விளையாட்டு அரங்கம் - ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்கு பிப்ரவரி 04 மாலை 4.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்தம் வழங்கி தளத்தை ஒப்படைத்த நாளிலிருந்து 270 நாட்களில் பணியை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Jallikattu StadiumTenderTN GovtTrichy
Advertisement
Next Article