For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கிரீன் கார்டு" - டொனால்டு டிரம்ப் வெளியிட்ட புதிய வாக்குறுதி!

09:15 AM Jun 22, 2024 IST | Web Editor
 கிரீன் கார்டு    டொனால்டு டிரம்ப் வெளியிட்ட புதிய வாக்குறுதி
Advertisement

அமெரிக்க கல்லுாரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது.  ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்,  குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட களத்தில் உள்ளனர்.  டிரம் அதிபராக இருந்த காலகட்டத்தில் குடியுரிமை திட்டத்தில் பல கடுமையான கெடுபிடிகளை கடைப்பிடித்தார்.

அதன்படி,  'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை வழங்குவது மற்றும் 'ஐடி' உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான 'எச்1பி விசா' வழங்குவதில் கடுமை காட்டி வந்தார்.  தற்போது அதிபர் தேர்தலை எதிர்நோக்கி உள்ளதால்,  குடியுரிமை விவகாரங்களில் தன் கெடுபிடி கொள்கைகளை டிரம்ப் தளர்த்திக் கொண்டுஉள்ளார்.

அந்த வகையில்,  மீண்டும் ஆட்சிமையத்தால் அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவா்களுக்கு நிரந்தரக் குடியேற்ற உரிமம் (கிரீன் காா்டு) தானாகவே கிடைக்கும் முறையைக் கொண்டுவரப் போவதாக அந்நாட்டு முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement