Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக, பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் - உதயநிதி ஸ்டாலின் பதிவு!

03:42 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

கோட்சே தூக்கிலிடப்பட்ட இந் நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சேலத்தில் நடைபெற உள்ள திமுகவின் 2-ம் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு சர்வதேச
சுற்றுலா தளமான கன்னியாகுமரியிலிருந்து திமுக, ரன் வே என்ற புல்லட் இருசக்கர வாகன பிரச்சாரம் இன்று தொடங்கப்பட்டது. 234 தொகுதிகளையும் சென்றடையும் விதமாக துவங்கிய இந்த பேரணியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார்.

திமுகவின் 2-வது இளைஞர் அணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இருந்து இருசக்கர வாகன பிரசார பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது 188க்கும் மேற்பட்ட புல்லட் வாகனத்தில் சிவப்பு கருப்பு வண்ணம் நிறைந்த ஆடை அணிந்து பேரணியில் திமுகவினர் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்! மாநில உரிமை மீட்புக்கான இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை,  தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம். 13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி,  வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்.” எனப்பதிவிட்டுள்ளார்.

Tags :
மாநிலமாநாடுCMO TamilNaduDMKDMK RidersKanyakumariMKStalinNews7Tamilnews7TamilUpdatesperiyarRunWayUdhayUdhaystalin
Advertisement
Next Article