For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பழனிபாபா தான் பெரியார்" - ஈரோட்டில் சீமான் பரபரப்பு பேச்சு

பழனிபாபா தான் பெரியார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் தெரிவித்தார்.
06:46 AM Jan 29, 2025 IST | Web Editor
பழனிபாபா தான் பெரியார் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் தெரிவித்தார்.
 பழனிபாபா தான் பெரியார்    ஈரோட்டில் சீமான் பரபரப்பு பேச்சு
Advertisement

ஈரோடு பவானிரோடு நெரிக்கல்மேடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

Advertisement

"பழனிபாபா இருந்து இருந்தால் அவரோடு நின்றிருப்பேன். இல்லையென்றால் அவர் என்னுடன் நின்று இருப்பார். பழனிபாபா கூட்டத்தில் பேச வரும்போது இஸ்லாமிய நண்பர்கள் என்னை அழைப்பார்கள். அவர் பேச்சை தூரத்தில் நின்று கேட்டேன். இன்று அவர் பேச்சை முன்னெடுத்து செல்கிறோம். நாள் பழனிபாபா பற்றி சிறு புத்தகத்தை வெளியிட்டேன். எல்லா நாட்டின் சட்டமும் பழனிபாபாவுக்கு தெரியும்.

கைரேகை வைக்க கூடிய குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருந்தபேது அதற்கு பெரியார் பேசியது ஏதாவது ஒன்று இருக்கிறதா? ஏன் ஒரு குரல் கூட எழுப்பவில்லை. ஆனால் குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடியவர் முத்துராமலிங்கத் தேவர். முத்துராமலிங்கத் தேவர் இறப்பின் போது அனுதாபம் தெரிவிக்காத ஒரு இயக்கம் திராவிட கழகம் தான்.

கமுதி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கல்லூரிகளை உருவாக்கி படிக்க வைத்தவர் பழனிபாபா. பெரியார் தான் படிக்க வைத்தார் என்கிற கூட்டத்திற்கு சொல்கிறேன் பழனிபாபா தான் பெரியார். இமானுவேல் சேகர் கொலைக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

அன்றைய முதலமைச்சராக இருந்த காமராஜரிடம், முத்துராமலிங்கத் தேவரை ஏன் கைது செய்ய வில்லை? என திரும்ப திரும்ப பேசி முத்துராமலிங்கத் தேவரை கைது செய்ய வைத்தார்கள். இந்த நாட்டின் விடுதலைக்காக எந்த போராட்டமும் செய்யாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். மத வாதத்திற்கு எதிராக போராடி உயிரிழந்தவர் பழனிபாபா தான். ஆனால் ஒரு முறை கூட
மதசார்பற்ற இயக்கம் என்று சொல்லி கொள்ளும் அமைப்புகள் ஏன் பேச மறுக்கிறது.

இஸ்லாம், கிறிஸ்து என நான்கு கூட்டமும் நமக்கு எதிரி என்று பெரியார் பேசி உள்ளார். நான் பெரியாரை படித்துவிட்டு பேசுகிறேன். தமிழ்நாட்டில் சீமான் ஆபத்தான அரசியலை முன்னெடுக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆமாம் திராவிட கட்சிக்கு ஆபத்தான அரசியலை முன்னெடுக்கிறேன்"

இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார் தெரிவித்தார்.

Advertisement