For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'பெரியண்ணா' விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம்!

12:41 PM Dec 28, 2023 IST | Web Editor
 பெரியண்ணா  விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை நல்லடக்கம்
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலானது நாளை மாலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். அண்மை காலமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல்,  காய்ச்சல்,  சளி தொந்தரவு ஏற்பட்டதால் கடந்த மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால்,  மருத்துவமனையில் இருந்து கடந்த டிச.12-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார்.  இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.  அதன் பின்னர்,  அவர் மீண்டும் நேற்று மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும்,  சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது.  இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து விஜயக்காந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் அவரது உடல்,  சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும்,  தமிழக திரையுலகிற்கும்,  உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.  கேப்டனின் இறுதி மரியாதை நாளை(டிச.29) மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமையகத்தில் நடைபெறவுள்ளது என்பதை மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்."

இவ்வாறு தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் விஜயகாந்தின் உடல் நல்லடக்கத்தின் போது அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தகக்து.

Tags :
Advertisement