அயோத்தி கோயிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி போலி விமான டிக்கெட்: 100 பேரிடம் நூதன மோசடி!
மதுரையிலிருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக 100 பேரிடம் டிக்கெட் புக் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், தினமும் ஏராளமானோர் கோயிலுக்கு தரிசனத்திற்காக செல்கின்றனர். அயோத்தி ராமர் கோயிலில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் அர்ச்சர்கர்கள் உடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராமர் கோயில் கருவறையில் கடவுளுக்கு சேவை செய்யும் அர்ச்சர்கர்கள் இனி மஞ்சள் (பீதாம்பரி) நிறத்தில் உடை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையில் இருந்து அயோத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்காக இண்டிகோ விமானம் மூலம் 100 பயணிகளை அழைத்துச் செல்வதற்காக கூறி பணம் வசூல் செய்துள்ளனர். மேலும், இன்று (ஜூலை-12ம் தேதி) மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்று அங்கிருந்து இண்டிகோ விமான மூலம் அயோத்தியா செல்வதாக திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்கள் : கமலா ஹாரிஸ் பெயருக்கு பதிலாக டிரம்பின் பெயரை உச்சரித்த ஜோபைடன் - அதிருப்தியில் ஜனநாயக கட்சி!
அதன்படி, இன்று 100 பயணிகள் மதுரையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று இண்டிகோ விமான நிறுவனத்தில் அயோத்தி செல்லும் விமானத்தை பற்றி விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அப்போது அப்படி எந்த டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்படவில்லை என அதிகாரிகள் பயனிகளிடம் தெரிவித்ததையடுத்து, பயணிகள்அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.