வடியாத தண்ணீர்...பசியால் வாடிய மக்கள்... 4-வது நாளாக நிவாரண உதவிகள் வழங்கிய மஜகவினர்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மஜக-வினர் 4வது நாளாக நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்பின் தாக்கம் தொடரும் நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 4-வது நாளான இன்றும் (டிச.08) நிவாரண பணிகள் தொடர்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மஜக-வினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். யாரும் உதவி செய்யாத இடங்களாக கேட்டறிந்து அங்கு சென்று நிவாரண உதவிகளை செய்கின்றனர்.
இதையும் படியுங்கள் : 3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய குழு – பாஜக அறிவிப்பு!
இன்று (டிச.08) திருவள்ளூர் - மணலி - மீஞ்சூர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், மஜக பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார். மேலும், முழங்கால் அளவு தண்ணீர் தேங்கிய இப்பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மஜக-வினர் மதிய உணவுகளையும், குடிநீரும் வழங்கினர். அதனை தொடர்ந்து, அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.