இந்தியாவில் தொடங்கியது #iPhone16 விற்பனை | நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற மக்கள்!
இந்தியாவில் இன்று முதல் விற்பனை தொடங்கிய நிலையில், ஐபோன் 16 சீரிஸை வாங்க அதிகாலை முதலே, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இட்ஸ் க்ளோடைம் நிகழ்வு இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகியவற்றை வெளியிட்டது.
இந்நிலையில் ஆப்பிள் தனது ஐபோன் 16 சீரிஸ் விற்பனையை இந்தியாவில் இன்று தொடங்கியது. இதனை வாங்க டெல்லி மற்றும் மும்மையில் உள்ள ஆப்பிள் கடைகளுக்கு வெளியே ஏராளமானோர் குவிந்தனர். ஐபோன் 16 சீரிஸ் மாடல் நேரடி விற்பனைக்கு வருவதற்கு முன்பே, 37 மில்லியனுக்கும் அதிகமாக முன்பதிவு மூலம் முன்விற்பனை செய்யப்பட்டது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட கிட்டத்தட்ட 60 நாடுகளில் இன்று விற்பனையை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்.
இதில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. இறக்குமதி வரிக்குறைப்பை தொடர்ந்து, முந்தைய மாடலைவிட இந்தமுறை குறைந்த விலையில் ஐபோன் ப்ரோ மாடல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வருடம் ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900க்கும், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஐபோன்:
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் – ரூ. 1,44,990
ஐபோன் 16 ப்ரோ – ரூ. 1,19,900
ஐபோன் 16 பிளஸ் – ரூ. 89,900
ஐபோன் 16 – ரூ.79,900