ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பேரணி!
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் பகுதி மக்கள் அதிகம் வாசிக்க கூடிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குடியேறுகின்றனர். ஆனால் அங்கு போதுமான அளவுக்கு வீடுகளின் எண்ணிக்கை இல்லை.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். இதனால் வருமானத்தில் பாதி வீட்டின் வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.