Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை!” - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மெகபூபா முப்தி கருத்து!

02:29 PM Dec 11, 2023 IST | Web Editor
Advertisement

ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கப் போவதில்லை என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது.  அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில்,  சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து எக்ஸ் தளத்தில் மெகபூபா முப்தி தனது கருத்தை பதிவிட்டிருப்பதாவது:

“ஜம்மு - காஷ்மீர் மக்கள் நம்பிக்கையை இழக்கவோ,  முயற்சியை கைவிடப் போவதோ இல்லை.  கெளரவம் மற்றும் கண்ணியத்துக்கான போராட்டம் தொடரும்.  இது எங்கள் பாதைக்கான முடிவல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
article 370Dhananjaya Y ChandrachudJ&KJammu and KashmirLadakhMehbooba Muftinews7 tamilNews7 Tamil UpdatesSupreme courtVerdict
Advertisement
Next Article