"அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு!
அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என கோவை திமுக முப்பெரும் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்” – திருமாவளவன் பேச்சு!
இந்த விழா மேடையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது :
"இந்த வெற்றி அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திருக்கிறது.
INDIA கூட்டணியில் நடுநாயகமாக பணியாற்றிவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 40 தொகுதிகளிலும் வேட்பாளாராக நின்று பணியாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மக்கள் ஏற்கனவே அவரை புறக்கணித்துவிட்டார்கள்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.