மக்களே…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - #IMD அறிவிப்பு!
ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, தமிழகத்திற்கு மேலாக நிலவி வருகிறது. அதே நேரம் தெற்கு திசையில் கர்நாடக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவி வருகிறது. இந்த விளைவாக தமிழக்தில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.