Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் #DMK 200% வெற்றி பெறும் என மக்கள் சொல்கின்றனர்" - திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக 200% வெற்றி பெறும் என பொதுமக்கள் சொல்கின்றனர் என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் தெரிவித்துள்ளார்.
02:52 PM Jan 17, 2025 IST | Web Editor
Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் வேட்பாளர் அறிவித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஜன.17) நிறைவுபெற உள்ளது.

இந்த சூழலில் காலை 10 மணியளவில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் ஆசியோடு நான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். 2026 ல் திமுக தான் வெற்றிப்பெற வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இந்த சூழலில்தான் நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளோம்.

மக்கள் மாபெரும் வெற்றியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இடைத்தேர்தலை சந்தித்துள்ளோம். இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை திமுக செய்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக 200% வெற்றி பெறும் என பொதுமக்கள் சொல்கின்றனர்"

இவ்வாறு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article