ஆவுடைநாயகி அம்மன் முகத்தில் ஜொலித்த வியர்வை முத்துக்கள் - பரவசத்துடன் வழிபட்ட மக்கள்!
திருப்பூர் மாவட்டம், எஸ்.பெரியபாளையத்தில் மிகவும் பழமையான அருள்மிகு ஆவுடைநாயகி அம்பாள் உடன்மர் சுக்ரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாத சிவராத்திரி பிரதோஷம் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு நேற்று (மார்ச் 27) மூலவர் சுக்ரீஸ்வரருக்கு 21 வகையான மூலிகை திரவியங்கள், காய்கறிகளால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு நந்தியம் பெருமானுக்கு மலர் மாலையும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். இதையடுத்து அருகிலுள்ள அருள்மிகு ஆவுடைநாயகி அம்மனுக்கு பூக்கள், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபராதனை நடைபெற்றது.
அப்போது அம்மனின் முகத்தில் வியர்வைத் முத்துக்கள் காணப்பட்டன. இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.