For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”அமைதி என்பது இல்லாமை அல்ல அது துக்கம்” - கூட்ட நெரிசல் விபத்து குறித்து 3 மாதங்களுக்கு பின் பெங்களூரு அணி பதிவு!

பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்து 3 மாதங்கள் கழித்து பெங்களூரு அணி பதிவிட்டுள்ளது.
01:30 PM Aug 28, 2025 IST | Web Editor
பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்து 3 மாதங்கள் கழித்து பெங்களூரு அணி பதிவிட்டுள்ளது.
”அமைதி என்பது இல்லாமை அல்ல அது துக்கம்”   கூட்ட நெரிசல் விபத்து குறித்து 3 மாதங்களுக்கு பின் பெங்களூரு அணி பதிவு
Advertisement

கடந்த ஜீன் மாதம் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.  சுமார் 17 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின் ராஜ் படித்தார் தலைமையிலான ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் இடாமல் இருந்தது. தற்போது 3 மாதங்கள் கழித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது பெங்களூரு அணி. அதில்,

”அன்புள்ள எங்கள் 12வது படையினரே (12 ஆவது படையினராக ரசிகர்களை குறிப்பிடுகிறார்கள்). இது உங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான கடிதம். நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அமைதி என்பது இல்லாமை அல்ல அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த நினைவுகள் மற்றும் தருணங்களால் நிறைந்திருந்தது.. ஆனால் ஜூன் 4 எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களையும் உடைத்தது, அன்றிலிருந்து அமைதி எங்கள் இடத்தைப் பிடித்து கொண்டது. அந்த அமைதியில், நாங்கள் துக்கப்படுகிறோம். வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். அப்படித்தான் ஆர்.சி.பி கேர்ஸ் உயிர் பெற்றது. அது நம் ரசிகர்களை குணப்படுத்த வேண்டி வளர்ந்தது. அது ரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட அர்த்தமுள்ள செயலுக்கான தளம். இன்று இந்த இடத்திற்கு நாங்கள் திரும்புகிறோம், கொண்டாட்டத்துடன் அல்ல, அக்கறையுடன் வந்துள்ளோம் .உங்களுடன் ஒன்றாக நிற்கவும், முன்னோக்கி நடக்கவும், கர்நாடகாவின் பெருமையாகத் தொடரவும் ஆர்.சி.பி கேர்ஸ் நாங்கள் எப்போதும் இருப்போம்”

என்று குறிப்பிட்டுள்ளது.

Tags :
Advertisement