Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

PBKSvsLSG | 8 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்!

நடப்பாண்டு ஐபிஎல் lலீக் சுற்றில் லக்னோ அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
06:46 AM Apr 02, 2025 IST | Web Editor
Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 13வது ஆட்டம் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று(ஏப்ரல்.01) நடைபெற்றது. லக்னோவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர்.

Advertisement

இதில் மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆக, ஒருபுறம் ஐடன் மார்க்ராம் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன்  44 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் கேப்டன் ரிஷப் பந்த் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஆயுஷ் படோனி நிதானமாக களத்தில் நின்று 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அடுத்து வந்த டேவிட் மில்லர் 19 ரன்களில் அவுட்டானார்.  இதனிடையே அப்துல் சமத் 27 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஓப்பனிங் செய்தனர். இதில் பிரியான்ஷ் 8 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து பிரப்சிம்ரன் சிங் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் குவித்தார். இவருடன் களத்தில் நின்ற ஷ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 42* ரன்கள் எடுத்தார். அதே போல் நேஹல் வதேரா 43* ரன்கள் அடித்தார்.  இறுதியாக பஞ்சாப் அணி, 16.2 ஓவர்களில் 177 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

Tags :
CricketIPL 2025Lucknow Super GiantsPBKSVSLSGPrabhsimran SinghPunjab KingsRishabh Pant
Advertisement
Next Article