PBKSvsDC | டாஸ் வென்ற டெல்லி - பஞ்சாப் அணி பேட்டிங்!
நடப்பாண்டிற்கா ஐபிஎல் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்ரேயஷ் தலைமையிலான பஞ்சாப் அணி, ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான டெல்லி அணியை இன்று(மே.24) எதிர்கொள்ளவுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
பஞ்சாப் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி உடனனான இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறிவிடும். டெல்லி அணி முன்னதாகவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டாஸை வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணியின் பிளேயிங் லெவன்:-
- PBKS
ஃபாஃப் டு பிளெசிஸ், செடிகுல்லா அடல், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முஸ்தாபிசுர் ரஹ்மான், முகேஷ் குமார்.
பஞ்சாப் அணியின் பிளேயிங் லெவன்:-
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்கிலிஸ், நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்.