Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

PBKS vs DC | பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.
06:23 AM May 25, 2025 IST | Web Editor
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.
Advertisement

10 அணிகள் இடையிலான 18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று (மே 24) நடைபெற்ற 66வது லீக் ஆட்டத்தில் டெல்லி - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.

Advertisement

பஞ்சாப் அணியின் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் மற்றும் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் களம்கண்ட கருண் நாயர் மற்றும் சமீர் ரிஸ்வி அதிரடியாக ஆடி டெல்லி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 208 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 58 ரன்களும், கருண் நாயர் 44 ரன்களும் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags :
CricketDC vs PBKSDelhiIPLIPL 2025news7 tamilNews7 Tamil UpdatesPBKS vs DCPubjabSportsSports Update
Advertisement
Next Article