For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரிசர்வ் வங்கியின் தடையை தொடர்ந்து, AXIS வங்கியுடன் கை கோர்த்த Paytm!

11:39 AM Feb 17, 2024 IST | Web Editor
ரிசர்வ் வங்கியின் தடையை தொடர்ந்து  axis வங்கியுடன் கை கோர்த்த paytm
Advertisement

இந்திய ரிசர்வ் வங்கியின் தடைக்குப் பிறகு,  Paytm Payments வங்கியின் நோடல் கணக்குகள் AXIS வங்கிக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான அக்கவுண்ட்கள் வைத்திருக்கும் பேடிஎம் (Paytm) நிறுவனமானது,  ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) விதிகளை மீறியதாக கடுமையான கட்டுப்பாடுகளை எதிர் கொண்டு வருகிறது.  பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜனவரி மாதம் பேடிஎம் மேபெண்ட்ஸ் வங்கி பிப்ரவரி 29 முதல் அதன் வங்கிக் கணக்குகள் அல்லது வாலட்களில் புதிய டெபாசிட் தொகையையும் பெறுவதை நிறுத்த உத்தரவிட்டது.  வெள்ளிக்கிழமை இந்த அவகாசம் மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பேடிஎம் தனது நோடல் கணக்கை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியுள்ளது.  இதன் மூலம் முன்பு போலவே தடையற்ற வணிகப் பரிவர்த்தனைகளைத் தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.  QR குறியீடுகள்,  சவுண்ட் பாக்ஸ் மற்றும் கார்டு மிஷின்கள் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகும் முன்பு போலவே தொடர்ந்து செயல்படும் என்றும் பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.

தொடர்ந்து ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு இணங்காததால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  வணிகர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கவே பேடிஎம் நிறுவனத்தின் வங்கி செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடு நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement