Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!

07:57 PM Feb 04, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார்.

Advertisement

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ஆந்திர மாநிலத்தில்  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இது மற்ற கட்சிகளுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளதாக அந்த மாநில அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்தார். அவரது இல்லம் அமைந்துள்ள அமராவதிக்கு சென்ற பவன் கல்யாணுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து சந்திரபாபு நாயுடு வரவேற்றார்.

இதையும் படியுங்கள் ; G.O.A.T. படப்பிடிப்பு தளத்தில் குவிந்த ரசிகர்கள் - செல்ஃபி எடுத்து மகிழ்வித்த விஜய்...!

இந்த சந்திப்பின்போது, ஜனசேனா கட்சிக்கான தொகுதிகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற சந்திப்பில், தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது போட்டியிடும் தொகுதிகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 

Tags :
Andhra PradeshChandrababu NaiduJanaSenapawan kalyanTeluguDesamPartyysr congress party
Advertisement
Next Article