Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சின்ன சைஸ்" விளம்பர விளக்கம் - பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம்!

03:55 PM Apr 23, 2024 IST | Web Editor
Advertisement

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் விவகாரத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளையும் இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு,  மத்திய அரசுக்கும் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளது. 

Advertisement

பொது மன்னிப்பு கோரும் விளம்பரத்தை பத்திரிகைகளில் சிறிய அளவில் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம். போலி விளம்பரங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அலோபதி மருத்துவத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகையில் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் பாலக்ரிஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கோர உத்தரவிட்டது.

வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பொதுமன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.  அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி போல்ஸ்லி,  பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போன்ற சிறிய அளவில் தான் வெளியிடுவீர்களா?  என கண்டனம் தெரிவித்தார்.

விளம்பரங்களின் நகலை பெரிதுபடுத்தி எடுத்துவரக்கூடாது என தெரிவித்த நீதிபதி போல்ஸ்லி பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பர பத்தியை எடுத்துவரவேண்டும் அப்போது தான் சரியான அளவு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் 170வது பிரிவை திடீரென நீக்கியது ஏன்? என என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அந்த பிரிவை மீண்டும் சேர்க்க உத்தரவிட்டும் அதனை செய்யாதது ஏன்? என்றும் வினவினர்.

பதஞ்சலி நிறுவனத்தின் போலி விளம்பரங்களுக்கு எதிராக மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  2018 முதல் போலி விளம்பரங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக தகவல் ஒளிபரப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இணைக்கவும் உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :
Acharya Balkrishnaallopathybaba ramdevimpleadedIndian Medical Associationlicensing authoritiesmedicinesmisleading advertisementsnews7 tamilNews7 Tamil UpdatesPatanjali ads caseSTATESSupreme courtUnion Territories
Advertisement
Next Article