For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கவனம் பெறும் 'ஹாட் ஸ்பாட் 2'  புரோமோ வீடியோ!

08:39 AM Aug 10, 2024 IST | Web Editor
கவனம் பெறும்  ஹாட் ஸ்பாட் 2   புரோமோ வீடியோ
Advertisement

விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ள 'ஹாட் ஸ்பாட் 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி கவனம் பெற்று வருகிறது. 

Advertisement

கடந்த 2021ம் ஆண்டு விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திட்டம் இரண்டு.  இத்திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'அடியே' படத்தை இயக்கினார் விக்னேஷ் கார்த்திக்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர் 'ஹாட் ஸ்பாட்' என்ற படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரே படத்தில் நான்கு கதைகளம் அமைந்திருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் 'ஹாட் ஸ்பாட்'  படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.  இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.  புரோமோ வீடியோவில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் நடித்துள்ளனர்.  விக்னேஷ் கார்த்திக் இயக்கவுள்ள இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Tags :
Advertisement