For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மொசாம்பிக்கில் படகு கடலில் மூழ்கி விபத்து... 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

10:02 AM Apr 09, 2024 IST | Web Editor
மொசாம்பிக்கில் படகு கடலில் மூழ்கி விபத்து    90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Advertisement

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்ததில் 90-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணத்திலிருந்து மீன்பிடி படகு ஒன்று சுமார் 130 பேரை ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஒரு தீவை அடைய முயன்றுள்ளது.  அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது.  இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 90க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.  மேலும் பலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  பலரைத் தேடி வரும் நிலையில்,  கடல் சீற்றம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  சிறிய படகில் அதிகமானோர் பயணித்ததும்,  அது பயணிகளுக்கான படகு அல்ல என்பதும் இந்த விபத்துக்கான காரணம் என்கின்றனர்.

பெரும்பாலானோர் காலரா நோய் பீதியின் காரணமாக பயந்து இந்த படகு மூலம் தப்பிக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்க நாடு,  அக்டோபரில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  32  பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதில் குறிப்பாக மொசாம்பிக்கின் நம்புலா மாகாணம் காலரா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதில் மூன்றில் ஒரு பங்கு நம்புலா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த சூழலில்,  காலரா பீதியின் காரணமாக படகு மூலம் தப்பிக்க முயன்ற போது விபத்தில் சிக்கியதால் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
Advertisement