For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கட்சி 2-3 பேருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆம் ஆத்மியில் இருந்து விலக மாட்டேன்" - ஸ்வாதி மாலிவால் 

02:59 PM May 27, 2024 IST | Web Editor
 கட்சி 2 3 பேருக்கு மட்டும் சொந்தமானது அல்ல  ஆம் ஆத்மியில் இருந்து விலக மாட்டேன்    ஸ்வாதி மாலிவால் 
Advertisement

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்வாதி மலிவால் கட்சியை விட்டு விலகுவதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

Advertisement

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.  அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால்  கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.  அப்போது கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.  இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.  அதில், “கடந்த 13-ம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக்கு சென்றிருந்தேன்.  அங்கு கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.  எனது கன்னத்தில் பலமுறை ஓங்கி அறைந்தார்.  என்னை தரையில் இழுத்து தள்ளினார்.  இதில் எனது ஆடைகள் அலங்கோலமாகின.  எனது மார்பிலும், வயிற்றிலும் அவர் எட்டி உதைத்தார்” என்று தெரிவித்திருந்தார்.

இதன்பேரில், கொலை மிரட்டல்,  மானபங்கம்,  தாக்குதல்,  அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  தொடர்ந்து, பிபவ் குமாரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட அவரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்வாதி மாலிவால், கட்சியில் இருந்து விலக மாட்டேன்,  ஆம் ஆத்மி கட்சி 2-3 பேருக்கு சொந்தமானது அல்ல.  கட்சித் தலைமையுடன் மீண்டும் நல்லுறவு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“மிகவும் மோசமாக தாக்கப்பட்டாலும், நான் என்னை சரி செய்து கொள்ள முயற்சித்தேன். ஏனெனில் நாட்டில் பெரிய தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.  இந்தப் பிரச்னை அரசியலாக்கப்படும் என்று எனக்குத் தெரியும்.  எனக்கு அது புரிகிறது.  நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சித்தேன்.  ஆனால் எனக்கு வேறு வழியில்லை.

இரண்டு மூன்று பேருக்கு மட்டும் கட்சி சொந்தமில்லை என்பதால் கட்சியிலேயே தொடருவேன்.  கட்சிகாக  என் வியர்வையையும் இரத்தத்தையும் கொடுத்துள்ளேன்.  இந்த சம்பவத்திற்குப் பிறகு,  3 நாட்களுக்குப் பிறகு நான் காவல்நிலையத்தில் முறையாக புகார் அளித்தேன்.  அப்போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் என்னிடம் "நீங்கள் பாஜக-வின் ஏஜென்டு என்று பலமுறை கூறினார்கள்.  நாங்கள் யாரும்  உங்களுடன் நிற்க மாட்டோம்" என்று கூறினார்கள்.

துணை நிலை ஆளுநர் மட்டுமே என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்.  ஆனால் அவர் ஒரு அரசியலமைப்பு பதவியில் இருப்பவர். என்ன நடந்தது என்று அவர் என்னிடம் கேட்டார், மேலும் நான் காவல்துறையுடன் தொடர்புகொள்வதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று கேட்டார்.  முதலமைச்சர் அரலிவந்த் கெஜ்ரிவால் இதுவரை என்னை அழைக்கவில்லை.

அனைத்துத் தலைவர்களும் அவரைச் சென்று சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.  நான் அவரை வாழ்த்தி ஆதரவு தெரிவிக்கச் சென்றேன்.  2006 முதல் அவருடன் வேலை செய்து வருகிறேன்.  சிறையில் அவர் சந்தித்த இன்னல், துன்பம் பற்றி கேட்டறிவதற்கும் இந்த கட்டத்தில் கட்சிக்கு ஆதரவளிக்க நான் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் பேச வேண்டும் என்று பேச சென்றேன்.

கெஜ்ரிவால் வெளியே வந்த போது நானும் திகார் சிறைக்கு வெளியே இருந்தேன்.  ஆனால் அங்கு ஏராளமானோர் இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.  என்னிடம் சில கோட்பாடுகள் உள்ளன.  ஆனால் இந்த அம்சம் குறித்து காவல்துறையிடம் மட்டுமே பேசுவேன்.  மற்றவர்கள் அதைத் திட்டமிடும் வரை அல்லது யாரோ ஒருவருக்கு எதிராக ஏதாவது சீர்குலைக்கும் வரை இந்த மோசமான செயல் நடக்காது.

குமாரை கோபப்படுத்தினால்,  முதல்வரை சந்திக்க முடியாது என்று  கட்சிக்குள்ளே பலர் கூறியுள்ளது எனக்குத் தெரியும்.  முதல்வர் வீட்டில் இல்லாவிட்டால் பாதுகாவலர் என்னை உள்ளே அனுமதித்திருக்க மாட்டார்.  இந்த சம்பவர் அவர் வீட்டில் நடந்திருக்கிறது.  என்னால் எதுவும் சொல்லாமல் இருக்க முடியாது.

நான் அங்கு கத்திக் கொண்டிருந்தேன்,  அவருக்கு அது கேட்க முடியவில்லையா? போலீஸ் வந்ததும்,  ஒரு பெண் எம்.பி.யை ஏன் உங்கள் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்கிறீர்கள் என்று நீங்கள் வெளியே வந்து கேட்க மாட்டீர்களா?   நான் நடத்தப்பட்ட விதம் மற்றும் நான் எப்படி அவமானப்படுத்தப்பட்டேன்,  அது மிகவும் கீழ்தனமாக உள்ளது,  மேலிட உத்தரவு இல்லாமல் இது நடக்காது.  இது ஒரு திட்டமிட்ட செயல்."

இவ்வாறு ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மலிவால் கூறியுள்ளார்.

Tags :
Advertisement