For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் பாஜக கூட்டணியில் இணையலாம்-அண்ணாமலை 

01:28 PM Feb 07, 2024 IST | Web Editor
மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் பாஜக கூட்டணியில் இணையலாம் அண்ணாமலை 
Advertisement

மோடியை பிரதமராக்க விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

Advertisement

பாஜகவுடன் கூட்டணியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக வெளியேறியது.  இது தொடர்பாக முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில்,  அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி,  பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  எனினும்,  பாஜகவுடன் மறைமுகமாக அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது.  இதைத்தொடர்ந்து உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிமுக பொதுக்குழுவிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ளார்.  சில தினங்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட உள்ளன.

அதிமுக,  பாஜ கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளன.  அதே நேரத்தில்,  "கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  அதிமுக கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன.  வரும் மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை பாஜக இன்னும் இறுதி செய்யவில்லை" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில்,  அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் டெல்லி சென்றார்.  டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார்.  இதற்கிடையில் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 14 பேரும், காங்கிரஸை சேர்ந்த ஒருவரும் சந்தித்து பாஜகவில் இணைந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  “நரேந்திர மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்.  கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அதிமுக மட்டும் வைத்து சொல்லவில்லை.  திமுக கூட்டணியிலிருந்தும் கட்சிகள் வரலாம்.

தேசிய ஜனயாக கூட்டணியில் எந்த கட்சி வர வேண்டும் வர கூடாது என்பதை அந்த அந்த கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டும்.  மதம்,  ஜாதி,  மைனாரிட்டி,  மெஜாரிட்டி அடிப்படையில் பாஜக தமிழகத்தில் அரசியல் செய்யாது.

மக்களின் நலனுக்காக மடும்மே பாஜக தமிழகத்தில் அரசியல் செய்யும்.  யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது.  பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பார்.  என் மன் என் மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க நட்டா தமிழகம் வருகிறார்” என கூறியுள்ளார்.

Tags :
Advertisement