Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது காங்கிரஸ்!

04:53 PM Jan 18, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டிக்கு 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டிற்கு 35-பேர் கொண்ட தேர்தல் குழுவை
அமைத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அண்மையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் அக்கட்சியின் மேலிட தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது கூட்டணி விவகாரங்கள், தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் சரணடைய கால அவகாசம் கேட்டு மனு…!

அதனைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தக் குழுவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், குமரி அனந்தன், மணி சங்கர் ஐயர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, கோபிநாத் ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத்,  ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், ஜெ.எம்.ஹரூண், பீட்டர் அல்போன்ஸ், நாசே ராமச்சந்திரன், ராஜேஷ் குமார், மெய்யப்பன், விஸ்வநாதன், கிறிஸ்டோபர் திலக், மயூரா எஸ்.ஜெயக்குமார். மோகன் குமாரமங்கலம் பிரவீன் சக்கரவர்த்தி ஆர்ம்ஸ்ட்ராங்க் ஃபெர்ணாண்டோ ஆகியோர் இப்பட்டியலில்  இடம்பெற்றுள்ளனர்.

மேவும்,  தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்,  தமிழ்நாடு காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தலைவர்,  மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர்,  காங்கிரஸ் சேவா தளத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :
All India CongresscommitteeCongressElectionParliment ElectionTamilNadu
Advertisement
Next Article