Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி மீண்டும் போட்டியிட கொடுக்கப்பட்ட 32 விருப்ப மனுக்கள்!

10:01 PM Feb 19, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் எம்.பி கனிமொழி மீண்டும் போட்டியிடுவதற்காக  32 விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல் வழங்கும் பணிகள் தொடங்கின. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னதாக திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் அறிக்கை தயாரிக்க மாநிலம் முழுவதும் குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டுக்கட்சியினருடன் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது பற்றி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல் வழங்கும் பணிகள் தொடங்கின.

அதன்படி, இன்று மட்டும் 100 மனுக்களை திமுக நிர்வாகிகள் பெற்றுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் எம்.பி கனிமொழி போட்டியிடுவதற்காக 32 விருப்பமனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனாவே திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக எம்.பி கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்க 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக சார்பில் எம்பி கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கருத்துக்களைக் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Election2024
Advertisement
Next Article