For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படை நாளை தமிழ்நாடு வருகை!

03:26 PM Feb 29, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற தேர்தல்  முதற்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படை நாளை தமிழ்நாடு வருகை
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகாக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். 

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிசந்தித்த சத்ய பிரதா சாகு கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகாக முதல்கட்டமாக 15 கம்பெனி துணை ராணுவ
படையினர் நாளை தமிழ்நாடு வர உள்ளனர்.  மேலும் 10 கம்பெனி துணை ராணுவ படையினர் மார்ச் 7ஆம் தேதி வர உள்ளனர்.  ஒரு கம்பெனிக்கு 90 துணை ராணுவ படையினர் இடம் பெற்றிருப்பார்கள்.

இந்த 25 கம்பெனி துணை ராணுவ படையினர் எந்த பகுதியில் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்துவது என்பது தொடர்பாக காவல்துறையினருடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.  தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் அது
தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு,  யார் எந்த பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள் என்பது
தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.  மேலும் 200 கம்பெனிகள் கேட்டிருந்த நிலையில் 25 கம்பெனி துணை ராணுவப்படையினரை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

Tags :
Advertisement