For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தாக்குதல் விவகாரம்: முக்கிய குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

04:08 PM Dec 16, 2023 IST | Web Editor
மக்களவை தாக்குதல் விவகாரம்  முக்கிய குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்
Advertisement

நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தின் முக்கிய குற்றவாளியான லலித் ஜா அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவையில் இரு இளைஞர்கள் பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  அவர்களை எம்.பி.க்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.  அது போல, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் இருவர் புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.  இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலம் தேவி,  அமோல் ஷிண்டே, சாகர், மனோரஞ்சன் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான லலித் ஜா புது டெல்லியில் வியாழக்கிழமை (டிச. 14) இரவு கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  முதலில் நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபடவே போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

அதாவது விசாரணையில் லலித் மோகன் ஜா கூறியதாவது,

நானும், எனது கூட்டாளிகளும் நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தீக்குளிப்பில் ஈடுபட திட்டமிட்டோம்.  தீக்குளிக்கும் போது உடலில் தீத் தடுப்பு மருந்து தடவிக் கொண்டால் அதிக காயம் ஏற்படாது.  ஆனால், அந்த தீத்தடுப்பு மருந்து கிடைப்பதில் பெரும் சிக்கல் இருந்ததால் தான் அந்த திட்டத்தை நாங்கள் கைவிட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் இதில் ஈடுபட்ட அனைவரின் செல்போன்களையும் அழித்துவிட்டதாகவும்,  லலித் தெரிவித்துள்ளார்.  லலித் தான் இந்த சதித் திட்டத்தின் மூளையாக இருக்க கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  மேலும்  இவர் அளிக்கும் சில தகவல்கள்
காவல்துறையினரை திசைதிருப்பும் நோக்கில் இருக்குமோ எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  லலித் விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை எனவும், அடிக்கடி தனது வாக்குமூலங்களை மாற்றிக் கொள்வதாகவும்  காவல் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags :
Advertisement