For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"#Olympics தங்கப் பதக்கத்தை விட மக்கள் அதிக கௌரவத்தை வழங்கியிருக்கிறார்கள்" - வினேஷ் போகத்தின் தாய் நெகிழ்ச்சி!

04:19 PM Aug 17, 2024 IST | Web Editor
  olympics தங்கப் பதக்கத்தை விட மக்கள் அதிக கௌரவத்தை வழங்கியிருக்கிறார்கள்    வினேஷ் போகத்தின் தாய் நெகிழ்ச்சி
Advertisement

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை விடவும், இந்த நாட்டு மக்கள் அதிக கௌரவத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தாய் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இறுதிப்போட்டிக்கு முன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார். ஆனால், வினேஷ் போகத் மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், பாரீசில் இருந்து வினேஷ் போகத் இன்று (ஆகஸ்ட் - 17ம் தேதி) தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவினர்கள், பொது மக்கள் உற்சாகமா வரவேற்பு அளித்தனர். ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை விடவும், இந்த நாட்டு மக்கள் அதிக கௌரவத்தை வழங்கியிருக்கிறார்கள் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தாய் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : #Tesla Cybertruck-ஐ இந்திய தேசிய கொடியால் அலங்கரித்த துபாயை சேர்ந்த இந்தியர் – வீடியோ வைரல்!

இது குறித்து வினேஷ் போகத்தின் தாயார் பிரேமலதா கூறியதாவது :

வினேஷ் போகத்தை வரவேற்க எனது கிராமம் முழுவதும் மட்டுமல்லாமல், அருகில் உள்ள கிராம மக்களும் இங்கே திரண்டிருக்கிறார்கள். அவரை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்க காத்திருக்கிறோம், அவர்தான் எனக்கு சாம்பியன். தங்கப் பக்கத்தைவிடவும், இந்த நாட்டு மக்கள் அவருக்கு அதிக மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார்கள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement