For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ParisMasters2024 | பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்... சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்!

08:31 AM Nov 04, 2024 IST | Web Editor
 parismasters2024    பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்    சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்
Advertisement

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisement

பாரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் பல முன்னணி வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடினர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (நவ.3) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இதையும் படியுங்கள் : #RainAlert | காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

இந்த போட்டி தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றது. புள்ளிகளை சேர்க்க இருவரும் ஆர்வம் காட்டினர். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்வெரேவ் முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டையும் 6-2 எனக் கைப்பற்றி அசத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 6-2, 6-2 என நேர் செட் கணக்கில் உகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்த தொடரில் கோப்பையை வென்றதன் மூலம், பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்ற 2வது ஜெர்மனி வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஜெர்மனி வீரரான போரிஸ் பெக்கர், 1986, 1989, 1992 ஆகிய 3 வருடங்களில் இந்த பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரைக் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement