Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்: பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் வெற்றி!

03:58 PM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.

Advertisement

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா உட்பட 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இது பிரான்ஸில் நடக்கும் 3வது ஒலிம்பிக் போட்டியாகும். இந்நிலையில் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் உலகக் கோப்பையை கைப்பற்றிய ஸ்பெயின் அணி, மகளிர் ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

அதேபோல 4 முறை தங்கம் வென்ற அமெரிக்கா அணி, ஜாம்பியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மொத்தமுள்ள 12 அணிகளில் நான்கு அணிகள் 3 குழுக்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள்
காலிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். அமெரிக்காவும், ஜெர்மனியும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) மார்சேயில் சந்திக்கின்றன.

Tags :
olympicParis Olympics 2024SpainUnited StatesWomen’s Football
Advertisement
Next Article