பாரிஸ் ஒலிம்பிக் : காலிறுதிக்கு முன்னேறினார் ரீத்திகா ஹூடா
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி நாளை (ஆகஸ்ட் 11) வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹூடா, ஹங்கேரியின் நாகி பெர்னட்டை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் ரீத்திகா ஹூடா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
இதையும் படியுங்கள் : “இன்று ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி!
இறுதியில், ரீத்திகா 12-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.