பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் - வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் போராடி தோல்வி!
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் பதக்க வாய்ப்பை இழந்தார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை சீனா 51 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் மற்றும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வெண்கலப்பதக்கங்களுடன் 58 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்ற பேட்மிண்டன் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் லக்ஷ்யா சென் விளையாடினார். அதன்படி மலேசிய வீரர் லீ ஜி ஜியாவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் லக்ஷ்யா சென்.
ஓபனிங் போட்டியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அதன்படி ஓபனிங் போட்டியை 21- 13 என்ற செட் கணக்கில் தன் வசப்படுத்தினார். இரண்டாவது ஆட்டத்தை மலேசிய வீரர் லீ ஜி ஜியா 21- 16 என்ற கணக்கில் வென்றார். ஆட்ட நேர முடிவில் 13 -21, 21 -16, 21-11 என்ற செட் கணக்கில் மலேசிய வீரர் லீ ஜி ஜியா வென்றார். இதன் மூலம் அவர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.