பாரிஸ் ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
இதையும் படியுங்கள் :ஷேக் ஹசீனாவின் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் எடுத்துச் சென்ற பொருட்கள் என்னென்ன தெரியுமா?
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இன்று (ஆகஸ்ட் - 6ம் தேதி) இந்தியாவுக்கு ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் குரூப்-பி பிரிவில் இடம்பிடித்துள்ள நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் நீரஜ் சோப்ரா நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தூரம் எறிந்து தனது தனிப்பட்ட சாதனையை படைத்தார்.