பாரிஸ் ஒலிம்பிக் : கணக்கை தொடங்கியது இந்தியா - பதக்கம் வென்றார் மனு பாக்கர்!
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியின் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் (ஜூலை 26) கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில், முதல் நாளான நேற்று மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுக்கு போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியது. 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் சீனா தங்கபதக்கத்தை வென்றுள்ளது. இதில் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலே 20 ஆண்டுகளுக்கு பிறகு 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருந்தார். தற்போது, நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு முதல் பதக்கம் 🥉https://t.co/DuPEOJFeo6 | #ManuBhakar | #Paris | #Shooting🔫 | #ParisOlympics2024 | #OlympicGames | #india | #Shooting | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/2IoyGuKebt
— News7 Tamil Sports (@News7Tam_sports) July 28, 2024
இதன் மூலம் இந்த 2024 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பதக்கத்தை பதிவு செய்ததுடன், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி காட்டி இருக்கிறார் மனு பாக்கர். மேலும், 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் கொரியா நாட்டை சேர்ந்த ஓ ஜின் தங்க பதக்கமும், அதே கொரியா நாட்டை சேர்ந்த கிம் யேஜி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
தற்போது, இந்தியாவுக்காக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக வீராங்கனை மனு பாக்கருக்கு இந்திய மக்கள் இணையத்தில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.