For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு! அமெரிக்கா 126 பதங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடம்! இந்தியா 6 பதக்கங்களுடன் 71-ஆவது இடம் பெற்றது!

10:07 PM Aug 11, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு  அமெரிக்கா 126 பதங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடம்  இந்தியா 6 பதக்கங்களுடன் 71 ஆவது இடம் பெற்றது
Advertisement

பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா 126 பதங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடத்தை பிடித்தது.

Advertisement

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், அமெரிக்கா 126 பதங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடத்தை பிடித்தது. சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்று, இன்று (11.08.2024) இரவு நிறைவடைந்தது.

போட்டியில் மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. பதக்கப் பட்டியலில் மொத்தம் 90 நாடுகள் இடம் பிடித்தன. இதில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும், போட்டியை நடத்திய பிரான்ஸ் 5-ஆம் இடத்தையும், இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆா்ஜென்டீனா, எகிப்து, துனீசியா தலா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றுள்ளது.

Tags :
Advertisement