For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட #Paramrudra சூப்பர் கம்ப்யூட்டர்கள் | நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

07:26 AM Sep 27, 2024 IST | Web Editor
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட  paramrudra சூப்பர் கம்ப்யூட்டர்கள்   நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
Advertisement

பரம்ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Advertisement

மகாராஷ்டிராவின் புனேவில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெற இருந்த விழா கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கப்பட இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக சில முக்கிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் கீழ் உள்நாட்டிலேயே ரூ.130 கோடி மதிப்பில் 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டு புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்த 3 சூப்பர் கம்ப்யூட்டர்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள் :சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி – வழக்கறிஞர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதலமைச்சர் #MKStalin!

புனேவில் உள்ள ராட்சத மீட்டர் ரேடியோ தொலைநோக்கி (ஜிஎம்ஆர்டி) மையத்தில், ரேடியோ வெடிப்புகள் மற்றும் வானியல் நிகழ்வுகளை ஆராய பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும். டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி ஆக்சிலரேட்டர் மையத்தில், அறிவியல் மற்றும் அணு இயற்பியல் துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்த பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும். இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் மையத்தில், இயற்பியல், அண்டவியல் மற்றும் புவி அறிவியல் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள பரம் ருத்ரா சூப்பர்கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும்.

Tags :
Advertisement