முடங்கிய மைக்ரோசாப்ட் மென்பொருள் | உலகம் முழுவதும் வங்கி, விமானம், ரயில் சேவைகளில் கடும் பாதிப்பு!
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை ஏற்படுத்தியது. இந்த செயலிழப்பு பல விமான சேவைகளை பாதித்தது.அதோடு, விமானங்களை தரையிறங்குவது விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகளை பாதித்தது.
குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஆகாசா போன்ற விமானங்களின் செக்-இன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து இந்த சேவைகள் மேனுவலாக நடத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.இதேபோல ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
உலகளவில் Windows 10 பயனர்கள் புதிய Crowdstrike அப்டேட் காரணமாக பெரும் செயலிழப்பை எதிர்கொண்டுள்ளனர்.இதனால் அதை பயன்படுத்தும் பயனர்களின் லேப்டாப்களில் ப்ளூ ஸ்க்ரீன் தோன்றுகிறது.சமூக ஊடகங்களில் பல பயனர்கள் தங்களுடைய ஸ்க்ரீனில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதன் மூலன் உலகம் முழுவதும் இந்த முடக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது.