#Paralympics2024 | பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்றார் தமிழக வீராங்கனை #NithyaSreSivan!
11:23 AM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
Advertisement
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
நித்யஸ்ரீ சிவன் யார்?
- தமிழ்நாட்டின் ஓசூரில் பிறந்தவர் நித்யஸ்ரீ சிவன்.
- தனது தந்தை மற்றும் சகோதரரின் தூண்டுதலால் ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார்.
- பின்னர் 2016 இல் ரியோ ஒலிம்பிக்கைப் பார்க்கும்போது தனக்கு பேட்மிண்டனில் ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
- தொடர்ந்து அவர் உள்ளூர் அகாடமியில் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினார்.
- ஆரம்பத்தில் நிதி நெருக்கடி காரணமாக வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே அகாடமிக்கு சென்றார்.
- ஆனால் நித்யஸ்ரீ சிவனின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை பார்த்த பயிற்சியாளரை அவருக்கு வழக்கமான பயிற்சியை வழங்கத் தொடங்கினார்.
- இதனையடுத்து அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஸ்ரீ கௌரவ் கன்னாவிடம் பயிற்சி பெறுவதற்காக லக்னோ சென்றார்.
சாதனைகள்
- இவர் கடந்த 2021ல் பஹ்ரைனில் நடந்த ஆசிய யூத் பாரா கேம்ஸ் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கமும், கடந்த 2022ல் டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்ளும் வென்றுள்ளார். மேலும அவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார்.