Paralympics2024 கோலாகலமாக தொடக்கம் - பாராலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற #JackieChan படங்கள் Viral!
பாராலிம்பிக் துவக்க நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில் தொடர் ஜோதியை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்ற படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் பாராலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான பிளேஸ் டி லா கான்கார்ட்டில் பாராலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றது. இந்த பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பாராலிம்பிக் விளையாட்டுகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் லண்டனின் வடமேற்கேழ் உள்ள கிராமமான ஸ்டோக் மாண்டேவில்லில் கடந்த 24ம் தேதி ஜோதி ஏற்றப்பட்டது. போட்டி தொடங்கும் முதல் நாளான நேற்று பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று துவக்க நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் பிரபலமான ஜாக்கி சான் பாரா ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார்.