#Paralympics2024: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அவ்னி லேக்ரா!
பாரிஸ் பாராலிம்பிக் 2024 போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ. ஏர் ரைஃபில் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன்படி 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கியது.
பாராலிம்பிக் விளையாட்டுகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் லண்டனின் வடமேற்கேழ் உள்ள கிராமமான ஸ்டோக் மாண்டேவில்லில் கடந்த 24ம் தேதி ஜோதி ஏற்றப்பட்டது. முதல் நாளில் பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் ஆகிய போட்டிகள் தொடங்கியது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் பாரா ஒலிம்பிக் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை அவ்னி லேக்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதேபோல துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய அணி இரண்டு பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.