#Paralympics2024 | இந்தியாவுக்கு 6-ஆவது தங்கம்... உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று அசத்தினார் பிரவீன் குமார்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆண்கள் உயரம் தாண்டுதல் T64 பிரிவில்
பிரவீன் குமார் தங்கம் வென்றுள்ளார்.
17-ஆவது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆண்கள் உயரம் தாண்டுதல் T64 பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதுடன் ஆசிய சாதனையும் படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 6-ஆவது தங்க பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களைப் பெற்று 14வது இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 21 வயதான பிரவீன் குமாருக்கு இரண்டாவது பாராலிம்பிக் பதக்கமாகும். இவர் முன்னதாக, டோக்கியோ 2020ல், உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சமீபத்தில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இதே போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார