For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
08:17 AM Apr 11, 2025 IST | Web Editor
ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா
Advertisement

கோவில் நகரம் என்று அழைக்கக்கூடிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.

Advertisement

ஆனால் இந்தாண்டு ஏகாம்பரநாதர் கோவிலில் பாலாலயம் செய்து, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருவதால், கொடியேற்றம் இல்லாமல் பங்குனி உத்திர வைபவம் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தையொட்டி ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவாக்குழலி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பல்வேறு மலர்களால் மாப்பிள்ளை, மணப்பெண்னாக அலங்கரித்து மணமக்களான ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஏலவார்க் குழலி அம்மையாருக்கு மூன்று முறை மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவத்தை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags :
Advertisement