பங்குனி உத்திரம் - கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியில் வரும் உத்திரம் நட்சத்திரத்தைப் பங்குனி உத்திரம் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகைபூ , ஜாதிப்பூ, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.400க்கு விற்பனையான மல்லிகைபூ இன்று ரூ.600க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி - ரூ.400, முல்லை - ரூ.750, ஜாதிமல்லி - ரூ.750, பன்னீர் ரோஜா - ரூ.120, சாமந்தி - ரூ.180, அரளிப் பூ - ரூ.350-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மக்கள் அதிகளவில் பூக்களை வாங்குவதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.